சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: விவாதம் குறித்து வெளியான அறிவிப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் (11.08.2023) நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற செயற்பாடு
அண்மையில், இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி 45 கையெழுத்துகளுடன் கையளித்தது.
தரமற்ற மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் வரவழைத்து
சுகாதாரத்துறையை பலவீனப்படுத்தி நோயாளிகளின் உயிரிழப்பிற்கு பங்களிப்பு
செய்தமைக்காக சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.