ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : வலியுறுத்தும் மொட்டுக்கட்சி
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடமே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, உரிய பாதுகாப்பு கோரி பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம் எழுதி இருந்தார்.
எனினும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்த விடயத்தைப் பிரதான காரணமாகக் கொண்டே மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் பிரேம்நாத் தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி வசம் இல்லாத
எனினும், இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மைபலம் எதிர்க்கட்சி வசம் இல்லாத போதும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவும், நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டவும் இந்தப் பிரேரணையை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் எனச் சில எதிரணி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பதற்குரிய நகர்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே ஆரம்பித்திருந்தமை தெரிந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri