நியூ டயமண்ட் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இன்னும் நஷ்டஈடு கிடைக்கவில்லை
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் கிழக்கு சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீப்பிடித்த கொள்கலன் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இன்னும் நஷ்டஈடு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ டயமண்ட் என்ற இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புக்காக 3.7 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான இழப்பீடு இலங்கைக்கு இதுவரை கிடைக்கவில்லை.
பேரழிவால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சேதம் குறித்த தொழில்நுட்ப மதிப்பீட்டின் இறுதி அறிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் நியூ டயமண்ட் கப்பல் நிறுவனத்தின் உள்ளூர் முகவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி சேதம் 19 மில்லியன் அமெரிக்க டொலராக, ரூபாவில் . 3.76 பில்லியனுக்கும் அதிகமானதாக மதிப்பிடப்பட்டது.
இந்தநிலையில் இதனை ஆராயக் காலம் தேவை எனக் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி தெரிவித்துள்ளதாகக் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையகத்தின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட நியூ டயமண்டின் கிரேக்க உரிமையாளர்களுக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை எதிர்த்துப் போராடும் போது இலங்கையின் அரச நிறுவனங்களால் ஏற்பட்ட செலவுகள் தொடர்பில் 442 மில்லியன் ரூபாவுக்கான கோரிக்கை வழங்கப்பட்டது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கப்பலின் தலைவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குற்றத்தை
ஒப்புக்கொண்ட அவருக்கு 12 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் 442
மில்லியன் சேத செலவுகளைச் செலுத்திய பின்னரே கப்பல் இலங்கையின் கடற்பரப்பில்
இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டது.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam