அரிசி விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்ட அறிவிப்பு
அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலை மற்றும் மொத்த விலை என்பனவற்றில் மாற்றப்படவில்லை எனவும் கட்டுப்பாட்டு விலை நீக்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய, சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220.00, நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 230.00, ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 240.00 மற்றும் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260.00 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட விலையை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தீவிர சோதனைகள் மற்றும் விசாரணைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில சந்தைகளில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் மாற்றப்பட்டுள்ளன என்ற தவறான தகவல்களை சில மொத்த விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் பரப்பி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த போலி பிரசாரங்கள்ன மூலம் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும், இதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரிசிக்கான விலைகள் மாற்றப்பட்டுள்ளனவா என சில சில்லறை விற்பனையாளர்களை பல தடவைகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் விசாரித்துள்ளதாகவும், எனினும் அரசு நிர்ணயித்த விலைகள் மாற்றமில்லை என அதிகாரசபை சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இம்மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, 1,555 விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி, நாடளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரசபை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam