கோவிட் தடுப்பூசியின் கூடுதல் அளவு தேவையில்லை - வைத்தியர் சந்திம ஜீவந்தர
முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தொற்றிலிருந்து போதுமான அளவு பாதுகாக்கப்படுகிறார்கள்.
எனவே தற்போது கோவிட் தடுப்பூசியின் கூடுதல் அளவு தேவையில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.
இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் ஏற்கனவே மூன்றாவது தடுப்பூசிகளைத் தொடங்கியுள்ளன. அல்லது ஊக்குவிப்பு திட்டங்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளன.
பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்திய இஸ்ரேல், நாட்டு மக்களில் 57 வீதமானோருக்கு ஊக்குவிப்பு தடுப்பூசி பிரசாரத்தைத் தொடங்கிய முதல் நாடாக உள்ளது.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள சிலருக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த வியாழக்கிழமை பைசர்/பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவின் கோவிட் வைரஸ் தடுப்பூசிகளின் மூன்றாம் அளவை அங்கீகரித்துள்ளது.
இதற்கிடையில், பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையேயான இடைவெளியை மூடுவதற்கு கோவிட் தடுப்பூசிகளின் பூஸ்டர் என்ற மூன்றாம் தடுப்பூசி வழங்குவதைத் தாமதப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.




