இலங்கையில் அடைக்கலம் கோருகிறார் சாமியார் நித்தியானந்தா! ரணிலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் கோரும் சாமியார்
மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா, ஜனாதிபதியிடம் அந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் நிந்தியானந்தா கடிதத்தில் கூறியுள்ளார்.
மருத்துவ செலவுகளை கைலாசா ஏற்றுக்கொள்ளும்
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழ்ந்து வருவதாக அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலைமையில் இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் கோரியுள்ளார். அத்துடன் சிகிச்சைக்கான முழு செலவையும் தனது சொர்க்கபூமியான கைலாசா ஏற்றுக்கொள்ளும் எனவும் நித்தியானந்த தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri