காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் விவகாரம்.. அம்பலமான அதிர்ச்சி பிண்ணனி
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் தொடர்பான உண்மை தற்போது வெளிகொண்டு வரப்பட்டுள்ளதாக குறித்த இளைஞர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின குறிப்பிட்டுள்ளார்.
அவர் சமூக வலைத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "காணாமல் ஆக்கப்பட்டவர்கள், 11 இளைஞர்களுக்கும் அதிகமானவர்கள் இருப்பதாக தற்போது நடைபெறும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அத்தோடு இவர்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர் என தெரிவிக்கப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ், முஸ்லிம் மற்றும் இராணுவத்தில் கடமையாற்றியவர்களின் பிள்ளைகளும் இதில் இருக்கின்றனர்.
வசந்த கரன்னாகொட
மேலும் காணாமல் ஆக்கப்படமை தொடர்பில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த இளைஞர்கள் பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என கூறப்பட்டதையடுத்து அது தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் முப்படையினர் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இவர்கள் எவ்வித பயங்கரவாத மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கடற்படையே ஈடுபட்டுள்ளனர் கடற்படையில் உயர் பதவியில் இருந்த அநேகர் சம்பந்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வசந்த கரன்னாகொட முதல் முன்னாள் கடற்படை தளபதிகள் பலர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அவர் இந்த காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பில் அல்ல. அவரின் மெய்ப்பாதுகாவலர் விடுதலை புலிகளுடன் சம்பந்தப்பட்டு மோசடியாக பணம் பெற்றுள்ளதாகவே முறைப்பாட்டில் சொல்லப்பட்டிருந்தது.
பின்னர் நாங்கள் தேடி பார்த்ததில் அது அவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டில் இவ்வாறு பொய்யாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் அன்றிருந்த கடற்படைத் தளபதி 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மேலே வராதப்படி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
தடுத்து வைப்பு..
அத்தோடு முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரத்தின சாட்சிகளை மறைக்க உதவி செய்தாக குற்றம்சாட்டப்படுகிறார். வழக்கு விசாரணையின் போது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட பிரசாத் சந்தன எட்டியாரச்சியை வெளிநாடு அனுப்புவதற்கு பண உதவி செய்துள்ளதோடு அவரை கடற்படை தளபதி இருந்த அறையின் பக்கத்தில் தங்க வைத்துள்ளார்.
மேலும் குறித்த நபரின் மனைவியும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். இவ்வாறு இரண்டு வருடம் சாட்சியை வைத்திருந்து இந்த வழக்கை ஸ்தம்பிக்க முயற்சியெடுத்துள்ளார்.
குறித்த காரணங்களை சாட்சியுடன் நான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ரவீந்திர விஜேயகுணரத்தின கைது செய்யும் சந்தர்ப்பத்தில் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யவிடவில்லை.
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குறித்த காலப்பகுதியில் கடற்படை புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த காலப்பகுயில் இளைஞர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை முகாமை கண்காணிப்பு செய்துள்ளார்.
அவர் இது தொடர்பில் பல காலம் சம்பவத்தை அறிந்து மறைத்துள்ளார். குறித்த இளைஞர்கள் 2009 ஆம் கடத்தப்பட்டு பல காலம் அடைத்து வைத்துள்ளனர். அக்காலப்பகுதில் சில இளைஞர்கள் தமது பெற்றோர்களிடம் கதைத்துள்ளனர்.
எவ்வளவு காலம் இருந்தார்கள் என்பதை குற்றஞ்சாட்டபட்டவர்கள் தான் தெரிவிக்க வேண்டும். 2009ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச தான் காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கூறினார்.
கோட்டாபயவின் உத்தரவு
ஆனால் அவருக்கே தெரியாமல் போய் விட்டது இந்த விசாரணை இவ்வளவு தூரம் வரும் என்று. அப்போது அவர் போரில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினரை கைது செய்ய முடியாது என்று விசாரணைகளை நிறுத்த அழுத்தம் கொடுத்தார்.
அப்போது தான் நான் பெற்றோர்கள் சார்பில் முன்னிலையாகினேன். எமக்கு வழக்கை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் விடுதலை புலியுடன் எனக்கு தொடர்பு இருப்பாத பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அக்காலத்தில் வெள்ளை வான் காலாசாரமும் இருந்த நிலையில் தான் நாங்கள் போராடினோம். அதன் பிறகு நல்லாட்சியில் நீதி கிடைக்கும் என் நினைத்தோம். அதிலும் ஒன்றும் நடக்கவில்லை.
தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் பல கோணங்களில் தடைகளை ஏற்படுத்தின. மேலும் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா காலத்தில் ஊடகங்கள் வாயிலாக எனக்கும் குறித்த பொற்றோர்களுக்கும் பல அவதூறு பரப்புரைகள் செய்யப்பட்டன.
2009ஆம் ஆண்டில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளையும் சந்திக்க பெற்றோர்கள் கடிதம் எழுதி சந்தர்ப்பம் கேட்ட போது எவ்வித சந்தர்ப்பமும் வழங்கவில்லை.
ஜனாதிபதி அநுர மாத்திரமே பொற்றோர்களின் துன்பங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியவர். குறித்த வழக்குக்காக நான் தனிப்பட்ட முறையில் பலவாறான துன்பங்களுக்கு முகம் கொடுத்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்




