சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல: நிமல் சிறிபால டி சில்வா
ஒரு சிலர் எண்ணுவது போல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தெரிவித்துள்ளார்.
நுவரெலியா கூட்டு சங்க விடுமுறை விடுதியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அந்த மாவட்ட இளம் பெண்கள் மற்றும் ஆசிரியர் சபை பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
பசனை பிரச்சினை காரணமாகவோ அல்லது வேறு பிரச்சினை காரணமாகவோ அரசாங்கத்துடன் கோபம் கொண்டு மக்கள் கைச்சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என நான் நினைக்கவில்லை.
மற்றவர்களில் பலவீனம் மற்றும் குறைப்பாடுகள் காரணமாக தேர்தல்களில் வெற்றிகள் கிடைக்காது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலுவான வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைள் மூலம் மாத்திரமே அரசியல் வெற்றிகளை பெற முடியும்.
சிலர் நினைப்பது போல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல.
எனினும் வேலைத்திட்டங்கள், கொள்கைகள் மூலமாக கட்சியை வலுவாக கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri