தமிழ் அரசியல்வாதிகளே ஒன்றுபடுக! அமைச்சர் நிமால் வலியுறுத்து
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாராகவுள்ளது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ச அரசாங்கம் வேறு. ரணில் அரசாங்கம் வேறு. தற்போது ஆட்சியில் இருப்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம்.

தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தயார்
இந்த ஜனாதிபதியும் சரி, இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும் சரி தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகாணத் தயாராகவுள்ளனர்.
ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்த அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படுகின்றனர்.
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும்

இன்னொரு பகுதியினர் இந்த மீது நம்பிக்கை வைக்கத் தயங்குகின்றனர். மற்றொரு பகுதியினர் தங்களுக்கிடையிலான கட்சி ரீதியிலான மோதலால் ஒதுங்கி நிற்கின்றனர்.
பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் அரசாங்கத்துடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.