நிலாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை, நிலாவெளி பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் மாலை தொடக்கம் அடைமழை பெய்துவந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி இன்னுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி வீதியில் நிறுத்தி வைக்கட்டிருந்த காருடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்களான இரு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri