'ஊடகர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்' இவ்வருடம் அமரர் தில்காந்திக்கு சமர்ப்பணம்

Student Journalist Universityofjaffna Goldmdal
By Kanamirtha Mar 02, 2022 10:30 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவின்போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' இந்த வருடம் அமரர் நவரத்னம் தில்காந்திக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு விழா நாளை 03.03.2022 மற்றும் நாளை மறுதினம் 04.03.2022 மற்றும் 04.03.2022 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைககழகதத்தின் பட்டமளிப்பு விழாவின்போது கடந்த நான்கு ஆண்டுகளாக “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” வழங்கப்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்துப் பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.

இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் நான்காவது வருடமாக தற்போது வழங்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாவது தக்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் 2020 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஷ் விஜயதர்சினியும் 2021 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த முனியப்பன் துலாபரணியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆண்டுக்கான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை மொணராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நவரத்னம் தில்காந்தி பெற்றுக்கொள்ளவிருந்த நிலையில் அவர் நோயின் காரணமாக இயற்கையெய்தியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு இத் தங்கப்பதக்கம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. செல்வி நவரத்னம் தில்காந்தி குறித்து அவரோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையில் கல்விகற்ற நண்பர்களால் வெளியிடப்பட்ட நினைவுப் பகிர்வு, அவளது பெயர் நவரத்னம் தில்காந்தி.

அவளது சொந்த ஊர் மொணராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமம். அவளது பெற்றோர் சிறுகடை வியாபாரிகள். அவள் ஆரம்பக் கல்வி தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை மொ/ஸ்ரீ கௌரி தமிழ் வித்தியாலயத்திலும், க.பொ.த உயர்தரத்தை மொ/ விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றாள்.

உயர் தரத்தில் 2A, B ஐ பெற்றுக் கொண்ட அவள், தனது முதல் பல்கலைக்கழகத் தெரிவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தாள். அரசியல் விஞ்ஞானம் மற்றும் ஊடகக் கற்கைகள் துறையில் முதலாம் வருடத்தில் பயின்ற அவள், இரண்டாம் வருடத்திலிருந்து ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்புக் கலையாகப் பயின்றாள்.

பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வந்தவேளை, திடீரென இயற்கை எய்தினாள். தான் கற்ற பாடசாலைகளில் ஊடகக் கற்கைகள் ஓர் பாட அலகாக இல்லாமையால் புதிய பாடத்தெரிவு என்ற அச்சம் ஆரம்பத்தில் அவள் மனதில் எழவே செய்தது.

ஆனால், விரிவுரையாளர்களின் சிறப்பான கற்பித்தல் முறைகள் அந்த அச்சத்தை போக்கியதால் இலகுவாகவும் விருப்புடனும் ஊடகக் கற்கைகள் துறையைச் சிறப்பாகக் கற்கக்கூடிய வாய்ப்பு அவளுக்குக் கிட்டியது.

செய்முறை பயிற்சிகள் மற்றும் ஊடகத்துறை ( வானொலி, தொலைக்காட்சி) மீது கொண்ட ஆர்வமே தன்னை தொடர்ந்து ஊடகக் கற்கைகள் துறையைக் கற்கத் தூண்டியதாக அடிக்கடி கூறுவாள். முதலாம் வருடத்தில் ஊடகங்கள், தொடர்பாடல் சார்ந்து கோட்பாட்டு ரீதியாக கற்ற அவள், இரண்டாம் வருடத்திலிருந்து செயல்முறை ரீதியாக கற்றலில் ஈடுபட்டாள். சஞ்சிகை வெளியீடு, புகைப்பட இதழியல், ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் ஊடகத் தொழில்சார் பயிற்சி என்பன ஊடகக் கற்கைகள் துறையால் அவளுக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் என்றே கூற வேண்டும்.

ஊடகத் துறைசார் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப் பகிர்வுகள், ஊடகத் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் ஆளுமை வாய்ந்தவர்களின் விரிவுரைகள் ஆகியன அவளுக்கான ஊக்கத்தை மேலும் அதிகரித்தது.

பாடத் திட்டத்தில் கற்ற விடயங்களை ஊடக நிறுவனங்களில் பயிற்சிக்காகச் சென்ற காலங்களில் அனுபவத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் அவளுக்குக் கிட்டியது. இதனூடாக ஊடகத்துறைக்குள் பணிபுரிய வேண்டும் என்ற விருப்பும் அவளிடத்தே அதிகமானது.

ஊடகத் துறையில் வானொலி, தொலைக்காட்சி சார்ந்து சாதிக்க வேண்டும் என்பதே அவளுடைய அவாவாக இருந்தது. இருந்தாலும், பல கனவுகளுடன் வந்த அவள் உயரம் தொடுவாள் எனத் தெரியும் - ஆனால் இவ்வளவு தூரம் செல்வாள் எனத் தெரியாது.

“கனவாகவே வந்து எங்கள் காவியமான தேவதை உறங்கச் சென்று விட்டாள்..! துயிலட்டும் அவள் அமைதியுடன்..!” கற்றலில் மட்டுமின்றி பல வழிகளிலும் அவளது கனவுகளைச் செதுக்கிய ஊடகக் கற்கைகள் துறையின் துறைத்தலைவர் கலாநிதி. சி. ரகுராம் அவர்களுக்கும், விரிவுரையாளர்களான யூட் தினேஸ் கொடுத்தோர், பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் மற்றும் அனுதர்ஷி கபிலன் ஆகியோருக்கும் மற்றும் அவளது கல்விக்கு உற்ற துணையாக இருந்த அவளது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை அவளுக்களித்துக் கௌரவித்த “நிலா நிதியம் குழுவினருக்கும்” அவளது நண்பர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US