இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பு! இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்
மிரிஹான பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நைஜீரிய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.01.2023) இடம்பெற்றுள்ளது.
செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜையே (40 வயது) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் வைத்து சிக்கிய சந்தேகநபர்
மிரிஹான - கங்கொடவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மடிக்கணினி ரக கணினியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சந்தேக நபர் இன்று (23.01.2023) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
