புதிய முதலமைச்சர் தொடர்பாக தமிழக உளவுத்துறையின் அதிர்ச்சி அறிக்கை..
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 4ஆம் திகதி என்பது ஒரு சாதாரண நாள் அல்ல அது அடுத்த ஐந்து ஆண்டுகால தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் நாளாக பார்க்கப்படுகின்றது.
234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தமிழகம் முழுவமும் 'யார் அந்த வெற்றியாளர்?' என்ற ஒற்றைக் கேள்விதான் எதிரொலிக்கிறது. இந்தத் தேர்தல் வழக்கமான இருமுனைப் போட்டி என்பதைக் கடந்து, பலமுனைப் போட்டியாக மாறியுள்ளது.
குறிப்பாகத் திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் புதிய சக்திகளின் வருகை, களத்தை இன்னும் சுவாரசியமாக்கியுள்ளது எனலாம்.
இந்தநிலையில் இந்த தேர்தல் தமிழக வெற்றிக்கழகத்தின் வருகையால் சூடுப்பிடித்தது என்றே கூறலாம்.
30-35 வாக்குவீதத்தை தமிழக வெற்றிக்கழகம் பெறும் என்று கூறப்பட்ட நிலையில் வாக்களிப்பின் பின்னர் சில மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இன மத ஜாதியை தாண்டி ஒரு தமிழன் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் திரண்டதை போன்ற உணர்வு உள்ளதாக கூறப்படுகின்றது.
ஜல்லிக்கட்டுக்கு பின்னர் ஒட்டுமொத்த தமிழகமும் இவ்வாறு திரண்டது வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
10 பேர் இருக்ககூடிய இடத்தில் குறைந்தது 6 பேர் TVK வை நோக்கி விரல் நீட்டியுள்ளனர்.அதற்கான பதில் மாற்றம் என்ற சொல்லாக வந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி