இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் நியூசிலாந்து
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தொடர்வதால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தலைவர்களின் நடவடிக்கைகளை கண்டிக்குமாறு கோரி நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இதன்போதே நியூசிலாந்து பிரதமர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய நாம் காத்திருக்கிறோம்.
இலங்கை மக்களின் அதிகரிக்கும் விரக்தியை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் ரீதியாக இது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம்.
இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை நியூசிலாந்து மிகுவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அத்துடன் சகல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இலங்கையில் நிலையான தீர்வுக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.