சித்திரை புத்தாண்டு பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் கைது
சித்திரை புத்தாண்டு குறித்து சிங்கள மொழியில் பாடப்பட்ட பிரபல பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல பாடகர் ரோஹன பெத்தகேவின் “சூர்ய மங்கல்ய” என்ற பாடலே இவ்வாறு திரிபுபடுத்தி பாடப்பட்டுள்ளது.
திரிபுபடுத்தப்பட்ட பாடல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணனி குற்றப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் வாரியபொல தலாதுஓய பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் இன்று குளியாப்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
