புது வருடம் உங்களுக்கு அமைதி நிறைந்ததாக அமையட்டும்: மன்னார் மறைமாவட்ட ஆயர் வாழ்த்துச் செய்தி
எங்களிடத்தில் உள்ள பிரிவினைகள் எல்லாம் நீங்கி, புதிய வருடத்தில் நாங்கள் புதிய உணர்வோடு, புதிய சமூகமாக ஒற்றுமையின் சின்னமாக எல்லோரும் ஒன்றுபட்டு வாழ அழைக்கிறோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துச் செய்தி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஆம் ஆண்டில் எமக்கு ஏற்பட்ட பேரழிவு நாடு முழுவதையும் அவலத்திற்கு உள்ளாக்கி உள்ளது. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த அவலத்தில் இருந்து மீள்வதற்கு ஒன்றாக பாடுப்படுகின்றோம்.
அரசாங்கம் முயற்சியுடன் எல்லா மக்களையும் ஒரே பார்வையில் மீண்டு எழுந்து வெளிச்சம் உள்ள சமூகமாக மாற எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பாராட்டிற்குரியது. ஏனைய சமய சமூக அமைப்புக்கள், தனியாருடைய முயற்சிகள், நன்கொடையாளர்கள், எல்லோரும் சேர்ந்து எடுக்கின்ற முயற்சிகள் மிகவும் பாராட்டிற்கூரியது.

இந்த வேளையில், பேரழிவு எங்களை நிச்சயமாக முடக்கி விட முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. புதிய வாழ்வை பெற்றுக் கொள்ளவே ஆண்டவர் எமக்கு இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்திருக்கின்றார்.
2026 ஆம் ஆண்டு ஒரு புதிய ஆண்டாக எங்களுக்கு பிறந்திருக்கிறது. இந்த சூழ்நிலையிலே வேதனைகளின் நடுவிலும் ஆண்டவர் நம்மை கைவிடவில்லை என்பதை இந்த ஆண்டு உறுதிப்படுத்துகின்றது என்கிற விசுவாச உண்மையோடு உங்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு ஆசியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், இயேசு எங்களுக்கு தருகின்ற ஆசீர்வாதம், புதிய ஆண்டில் எங்களுக்கு தருகின்ற செய்தி என்னவென்றால் இந்த வருடம் முழுவதும் எழுச்சி மிக்க நாடாக, எழுச்சி மிக்க சமூகமாக நாங்கள் மலர வேண்டும் என ஆசிக்கிறேன் என வாழ்த்தியுள்ளார்.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri