ஹிருணிகாவுக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு..!
ஹிருணிகா பிரேமசந்திரா மற்றும் மற்றொரு நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (15.05.2026) உடல்நலக்குறைவு காரணமாக வழக்கில் முன்னிலையாகாததைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் பாசன் அமரசேகர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிடியாணை உத்தரவு
2022ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் அருகே நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, ஹிருணிகா பிரேமசந்திரா உட்பட 12 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணையில் இருந்தபோது, விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிணைதாரர்களுக்கு அறிவிப்புகள் மற்றும் அழைப்பாணைகள் அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.