இரண்டு வருடங்களுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடரும்: நிதியமைச்சர் அலி சப்ரி தகவல்
இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்
பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை, நாடு முழுவதும் பரவலான துன்பத்தை ஏற்படுத்;தியுள்ளன.
இந்தநிலையில் பொதுமக்கள் உண்மையை அறிய வேண்டும். எனினும் நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று தமக்கு தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது, எனினும் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்சினைக்கான தீர்வின் காலத்தை தீர்மானிக்கும என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம் News Lankasri