சூடுபிடித்தது கொழும்பு அரசியல்!! சஜித் வெளியிட்டுள்ள அறிவித்தல் - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான யோசனையை கட்சி ஆதரிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்கு பல கட்சிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்த விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 26 நிமிடங்கள் முன்

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
