சமூக ஊடகங்கள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை: செய்திகளின் தொகுப்பு
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |