நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கடையடைப்பு போராட்டம் : செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, எதிர்வரும் 13 ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (07.10.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரும் விவகாரத்துடன் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு முழுமையான சர்வதேச தலையீட்டையும் கோரி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்தப்படவேண்டுமென்றும் வணிகர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த எந்த நடவடிக்கைக்கும் பரிபூரண ஆதரவை வழங்கி வரும் பாரம்பரியத்தையுடைய யாழ்ப்பாண வணிகர் கழகம், இந்த போராட்டத்தையும் முழுமையாக ஆதரிப்பதாக வணிகர் கழகத்தினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,



