கொழும்பில் ஏழு இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் : ஊடகம் ஒன்றின் செய்தி - செய்திகளின் தொகுப்பு
கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளின் திட்டம் தொடர்பான உண்மைகளை அறிந்த பல்லேகல சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர், அது தொடர்பான குறிப்புகள் அடங்கிய கடிதத்தை தன்னேகும்புர காவல் நிலையத்திற்கு எறிந்த போது இந்த திட்டம் தெரியவந்துள்ளது.
சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் குறித்த கைதி கேட்டுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
