ஜனாதிபதி ரணிலுக்கு பறந்த அவசர கடிதம்(Video)
நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டத்துறையை "நலிவுற்ற" பிரிவாக அறிவிக்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை குடியிருப்புகளை "நலிவுற்ற" பிரிவாக அறிவித்து அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர கடிதத்தை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கி உதவுங்கள் என இந்தியப் பிரதமர் நிரந்தர மோடியிடமும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,