ஜனாதிபதியின் அவசர ஓலை! செய்திகளின் தொகுப்பு(Video)
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவுகளில், தேசிய சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கை மாத்திரமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இன்று அனுப்பியுள்ள இந்த எழுத்துமூல அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்டகால முறைமை மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட யோசனைகளில் வங்கி விவகார மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான குழு பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குழு மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான குழு ஆகியவற்றை வங்கி விவகாரங்கள் தொடர்பில் நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும் அவை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சபாநாயகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,