நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: 6 பேர் காயம்
நியூசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்றைய தினம் (20.07.2023) நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆக்லாந்தில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாதச் செயல் அல்ல
இந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு பயங்கரவாதச் செயல் அல்ல என்றும், கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
