நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் 3 பழங்குடி உறுப்பினர்களை இடைநீக்க பரிந்துரை
நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் 3 பழங்குடி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் நவம்பர் மாதம், மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவின் நகலை குறித்த இனத்தை சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க் நாடாளுமன்றத்தில் வைத்து கிழித்தார்.
அதன்போது, தனது இனத்தின் பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பையும் அவர் வெளிப்படுத்தினார்.
இதன்போது, அதே பழங்குடி இனத்தை சேர்ந்த ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹனாவுடன் இணைந்து முழக்கம் எழுப்பினர்.
குறைந்தபட்ச தண்டனை
இது தொடர்பாக, நியூசிலாந்து அரசாங்கம் அமைத்த ஆணையம், முழக்கம் எழுப்பிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.
As Parliament's Justice committee shoots down the massively unpopular Treaty Principles Bill, it's a good time to remember Hana-Rāwhiti Maipi-Clarke's original response to David Seymour's race-baiting bill: pic.twitter.com/vDTVvVY2ML
— Nick (@StrayDogNZ) April 4, 2025
இதன்படி, ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க்கை 7 நாட்களுக்கும் ஏனைய இருவரை 21 நாட்களுக்கும் இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹனா, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
