பனிப்புயல் எச்சரிக்கை: நியூயோர்க் உட்பட பல மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம்
பெரிய புயல் 24 அங்குல பனிப்பொழிவையும் பலத்த காற்றையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நியூயோர்க் உள்ளிட்ட பல மாநிலங்களில் அவசரகால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நியூ ஜெர்சி, கனெக்டிகட் மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்களின் ஆளுநர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
இதன்படி, நேற்று (22.02.2026) பிற்பகல் வரை சுமார் 15,247 விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன், 3,509 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நியூயோர்க் நகரம் மேயர்,நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கட்கிழமை மதியம் 12 மணி வரை நகர வீதிகளை மிதிவண்டிகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற வாகனப் போக்குவரத்துக்கு மூட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து பள்ளிக் கட்டிடங்களையும் மூடவும் அறிவித்துள்ளார்.
அதேபோன்று, கனெக்டிகட் மாநில ஆளுநர், மாநில நெடுஞ்சாலைகளில் வணிக வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதித்துள்ளார்.
அவசரநிலை பிரகடனம்
மாசசூசெட்ஸ்ஆளுநர், அவசரகால நிலையை அறிவித்து, 200 தேசிய காவல்படை உறுப்பினர்களை உதவிக்காக அழைத்துள்ளார்.

மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களும் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நியூயோர்க் ஆளுநர், லாங் ஐலேண்ட், நியூயார்க் நகரம் மற்றும் லோயர் ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் 100 தேசிய காவல்படை உறுப்பினர்களை நிலைநிறுத்தியுள்ளார்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri