புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் கட்டாய பாரம்பரிய அங்கமான புத்தாண்டு இனிப்பு அட்டவணை தயாரிப்பதற்கான செலவு 2019 இல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை (2023) ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டிற்கான அட்டவணை தயாரிப்பதற்கான செலவு 2.2 மடங்கு அதிகரித்துள்ளது.
வெரிட்டி ரிசர்ச் நடத்தும் PublicFinance.lk வெளியிட்டுள்ள ஆய்வில், இந்த ஆண்டிற்கான புத்தாண்டு இனிப்பு அட்டவணை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இனிப்புகளின் விலை
கடந்த ஆண்டு (2023) இனிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இனிப்புகளின் விலை 2019 ஐ விட 2.3 மடங்கு அதிகமாக இருந்துள்ளதுடன், இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது.
மேலும் இனிப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மின்சாரம் மற்றும் எரிவாயு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கணக்கெடுப்புக்காக, 2019, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் ஏப்ரல் முதல் வாரத்தில் கொழும்பு மாவட்டத்தின் திறந்த சந்தையின் சராசரி விலை மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட விலை விபரம் என 'வெரிட்டி ரிசர்ச்' நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |