புதிய வைரஸ் தொற்றால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்! வெளியாகியுள்ள தகவல்
இன்னும் இரண்டு வாரங்கள் வரை கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பரவி வைரஸை விட புதிய வைரஸ் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 55 வீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சாதாரணமாக நோய் அறிகுறிகள் தென்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மரணங்கள் ஏற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.இன்னும் சில வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை குறையலாம்.
இதனை தவிர கோவிட் பரவியுள்ள பிரதேசங்களின் தேவைக்கு அமைய கோவிட் தடுப்பு மத்திய நிலையத்தின் தலைவருடன் இணைந்து , அந்த பிரதேசங்களை தனிமைப்படுத்த சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுததுள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri