விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்! - மற்றுமொரு புதிய பிறழ்வு கண்டுபிடிப்பு
கொவிட் வைரஸின் மற்றுமொரு புதிய பிறழ்வு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்த புதிய வைரஸ் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், ஹெங்கொங் உள்ளிட்ட சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மீறிய வலுவை இந்த வைரஸ் கொண்டுள்ளதாக வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, அபிவிருத்தி அடைந்த நாடுகளிலேயே கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் பிரித்தானியா முக்கிய இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் புதிதாக 47,240 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 21 ஆயிரத்து 497 ஆக உயர்ந்திருக்கிறது. இதைப்போல கொரோனா தொற்றால் மேலும் 147 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,44,433 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
