வடக்கில் புதிய வகை நுளம்பு! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நகர்ப்புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா நோய்யற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த நோய் மீண்டும் நாட்டில் தலையெடுக்கும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி பேராசிரியர் அனுலா விஜேசுந்தர இந்த நுளம்பு குறித்து பொது மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இலங்கையின் வெப்பநிலை மற்றும் நீர்வளம் இந்த நுளம்பின் இனப்பெருக்கத்தத்திற்கு ஏற்றதாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அனோபிலஸ் டிபென்சி Anopheles Defensi mosquito நுளம்பின் புதிய இனங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் விஜேசுந்தர தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வருபவர்கள் , குறிப்பாக கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுவோர் மற்றும் யாத்ரீகர்கள், இந்த நோயை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவ சங்கத்தின் தலைவி குறிப்பிட்டார்.
இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மொசாம்பிக் மற்றும் மடகாஸ் தீவுகளுக்கு செல்லும் வணிகர்கள் தங்கள் பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் அனுலா விஜேசுந்தர, கேட்டுக்கொண்டார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
