ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு
புதிய இணைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) ரத்து செய்துள்ளது.
அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றவாளிகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மறு விசாரணைக்காக மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மதிசுதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மித்தெனிய ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மனம்பேரி அரச தரப்பு சாட்சியாக முன்னர் மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொலைக் குற்றச்சாட்டின் பின்னணியில் பிள்ளையானுடன் சம்மந்தப்பட்ட குழுவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....