நானுஓயா - பதுளை இடையிலான புதிய தொடருந்து சேவை ஆரம்பம்
நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய தொடருந்து சேவை இன்று (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நானுஓயா புகையிரத நிலைய வளாகத்தில் இடம்பெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்வின் பின்னர் தம்மிக ஜயசுந்தர தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள்
தற்போதுள்ள பயணிகளின் சுற்றுலாப் தேவையின் அடிப்படையில் இந்த தொடருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த தொடருந்து செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10இற்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



