வரி நீக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5 சதவீத நிறுத்தி வைப்பு வரி நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரி மாற்ற விபரங்கள்
ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி,150,000 ரூபாய் சம்பளத்திற்கு 3500 ரூபாய் வரி அறவிடப்படும்.
200,000 ரூபாய் சம்பளத்திற்கு 10,500 ரூபாய் வரி அறவிடப்படும்.
250,000 ரூபாய் சம்பளத்திற்கு 21,000 ரூபாய் வரி அறவிடப்படும்.
300,000 ரூபாய் சம்பளத்திற்கு 35,000 ரூபாய் வரி அறவிடப்படும். 350,000 ரூபாய் சம்பளத்திற்கு 52,500 ரூபாய் வரி அறவிடப்படும்.
400,000 ரூபாய் சம்பளத்திற்கு 70,500 ரூபாய் வரி அறவிடப்படும்.
10 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு 286,500 ரூபாய் வரி அறவிடப்படும்.
இதேவேளை நிறுத்தி வைக்கும் வரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இலாபம் பெறும் அதாவது வட்டிக்கு பணம் வழங்கும் துறைகளுக்கு 15 சதவீத வருமானத்திற்கு 5 சதவீத வரி மற்றும் இலட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தினால் 10 சதவீத வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



