கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நடைமுறை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை ஒழிப்பதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வெளியேறும் மற்றும் நுழைவு முனையங்களில் 8 கமராக்கள் பொருத்தப்படும் எனவும் அவர்களின் முகங்களைச் சோதனை செய்வதன் மூலம் தேடப்படும் குற்றவாளிகள் உட்பட நபர்களை பொலிஸாரால் கைது செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.
தானியங்கி
முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகளின் தரவுகளை இந்த தானியங்கி அடையாள அமைப்பில் உள்ளிடுவவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, 1091 குற்றவாளிகளின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, அதில் 790 பேர் தங்கள் தரவுகளை பூர்த்தி செய்துள்ளனர்.
750 பேரின் புகைப்படங்களைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 583 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்துள்ளனர். 98 பேர் வெளிநாடு சென்றுள்ளனர், 37 பேருக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 42 சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
