நுகர்வோரை பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை
உணவுப் பொருட்களின் எடை மற்றும் தரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான துரித வேலைத்திட்டம் வகுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
செலவிடும் பணத்திற்கு ஏற்ப உரிய தரத்தில் பொருளைக் கொள்வனவு செய்வது நுகர்வோருக்குரிய உரிமையாகும்.
இதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலளார்களின் பங்கேற்புடன் ஒரு வேலைத்திட்டத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நுகர்வோரை பாதுகாப்பதற்காக குறுங்கால வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
