புதிய ராஜாங்க அமைச்சர் இன்று நியமனம்
சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜானக வக்கும்புர மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகிறார்.
குறித்த அமைச்சின் அமைச்சரவை அமைச்சுப் பதவியை இதற்கு முன்னதாக கெஹெலிய ரம்புக்வெல்ல வகித்து வந்தார்.
இராஜாங்க அமைச்சு
சர்ச்சைக்குரிய முறையில் மருந்து இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹெகலிய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்திருந்தார். இந்நிலையில் சுற்றாடல் அமைப்பு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் சுற்றாடல் துறையின் இராஜாங்க அமைச்சு ஜானக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri