போக்குவரத்துப் பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபரின் புதிய அறிவுறுத்தல்
இரவு நேரங்களில் வாகன சோதனைகளை மோற்கொள்ளும் பொலிஸாருக்கு வழிகாட்டும் வகையிலான புதிய அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார்.
அதன் பிரகாரம் இரவு நேரங்களில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸார், பிரகாசமான விளக்குகளை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய அறிவுறுத்தல்
இரவு நேரங்களில் போக்குவரத்து சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் பல்வேறு வகையான டோர்ச் விளக்குகளைப் பயன்படுத்தும் போது அவை சாரதிகளின் முகத்தில் படுவதால் வாகனத்தை கையாள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சில சந்தர்ப்பங்களில் சிரமம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின்விளக்குகளை முடிந்தவரை பயன்படுத்துமாறும், வாகன சாரதிகளுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள், ஒளிரும் ஜெக்கெட் மற்றும் ஒளிரும் கையுறைகளை அணிய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஒளிரும் ஜெக்கெட்டுகளை அணியாததால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைத் தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri