கொழும்பில் உணவகங்களுக்கு செல்வோருக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடு
கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாகும் நடைமுறை விரைவில் அமுலுக்கு வரவுள்ளது.
இது தொடர்பில் தலைநகரிலுள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருவதாக கொழும்பு நகர உணவகங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஹார்ப்போ குணரட்ண தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டையை காண்பித்தால் உணவகங்களிற்கு வருபவர்களிற்கு நம்பிக்கை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உணவகங்களின் வாசல்களில் வாடிக்கையாளர்கள் தடுப்பூசி அட்டையைக் காண்பிக்கலாம் அல்லது அட்டையை புடைப்படமாக எடுத்து தொலைபேசியில் காண்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று உணவகங்களில் பணியாற்றுபவர்களும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை குறிக்கும் வகையில் பட்ஜ் அணிந்திருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.