புதிய கட்டுப்பாடுகள், கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி நிறுத்தம் - இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு
துபாயில் அதிகரித்து வரும் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துபாயில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கோவிட் வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமது விஞ்ஞானிகள் குழுவின் ஆலோசனைகள் கிடைக்கும் வரை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய கோவிட் வைரஸால் ஏற்படும் நோய்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இச் செய்திகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
