பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் - நாளை முதல் அமுல்
ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரித்தானியா பயண விதிகளை கடுமையாக்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல்வேறு நாடுகள் 30க்கும் அதிகமான நாடுகளில் பரவி வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகள் பயணக்கட்டுபாடுகளை விதித்து வருகிறன.
அதற்கமைய எதிர்வரும் 7ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பிரித்தானியா புதிய பயணக்கட்டுப்பாடு விதிகளை அமுல்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகள், அவர்கள் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதன் பின் பிரித்தானியா வந்திறங்கியவுடன், அந்த பரிசோதனை முடிவுகளை சமர்பிக்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்துடன் தொடர்புடையவர்கள் மூலம் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பயணக்கட்டுப்பாடுகள் சிவப்பு பட்டியல் உள்ளடக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தனிமைப்படும் ஹோட்டல்களுக்கு 2000 பவுண்ட் தொகையை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பிரித்தானிய அறிவித்துள்ள சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளின் பட்டியலில், நைஜீரியாவும் இணைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தவரை தற்போது ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
“ஏற்கனவே பயண திட்டங்களில் இருப்பவர்களுக்கு, இது ஒரு கடுமையான நடவடிக்கையாக தான் காணப்படும். எனினும் இது ஒரு தற்காலிக முடிவாகவே காணப்படும்” என சுகாதாரத் துறை செயலாளர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
