ஐ.நாவில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை! - பிரித்தானிய தூதுவர் அறிவிப்பு
இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டை நோக்கமாக கொண்டு, மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் புதிய பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டன் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை தொடர்பில் பிரேரணையை கொண்டுவரவுள்ள கனடா, ஜேர்மன், வட மெசிடோனியா, மலாவி, மொண்டிநீக்ரோ மற்றும் பிரித்தானியாவின் பிரதிநிதிகளைக் கொண்ட கோர் குழுவினால் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.
யுத்த கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து அர்த்தமுள்ள அமைதியை ஏற்படுத்துவதற்கு இலங்கை பல விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படை வசதி அபிவிருத்தி, கண்ணிவெடி அகற்றல், காணிகளை மீளக் கையளித்தல், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றல் ஆகிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்காகவே புதிய பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




