இலங்கையின் விளையாட்டுத்துறை சட்டங்களில் புதிய மாற்றம்

Government Of Sri Lanka Sports
By Kamal May 28, 2025 04:34 PM GMT
Report

இலங்கையில் விளையாட்டு துறை சார் சட்டங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலான சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதி விசேட வரத்தமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய விளையாட்டுக்கள் ஒன்றியங்களில் ஒழுங்கு விதிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்க தேசிய விளையாட்டுக்கள் ஒன்றிய ஒழுங்கு விதிகள் என்ற பெயரில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமானது ஏற்கனவே நாட்டில் விளையாட்டு துறைசார் சட்டங்களின் திருத்தி அமைக்கப்பட்ட வடிவமாக காணப்படுகின்றது.

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண்: குவியும் பாராட்டுக்கள்

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண்: குவியும் பாராட்டுக்கள்

விளையாட்டு சட்டம்

2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் 1973 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க விளையாட்டு சட்டம் போன்றவற்றை திருத்தி மேம்படுத்தும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இயங்கி வரும் விளையாட்டு சங்கங்கள் அல்லது அமைப்புக்களை ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தும் வகையிலும் வெளிப்படை தன்மையாகவும், ஊழல் மோசடிகள் அற்ற வகையிலும், பொறுப்பு கூறல் நிறைந்த அமைப்புக்களாகவும் செயற்படுவதற்கு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விளையாட்டுத்துறை சட்டங்களில் புதிய மாற்றம் | New Regulations Of Sports Sri Lanka

குறிப்பாக இலங்கையில் விளையாட்டு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளில் நேர்மை, சம உரிமை, அனைத்து மட்டங்களிலும் விளையாட்டு துறையை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து விளையாட்டு ஒன்றியங்களும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு துறை சங்கங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் ஏனைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் விளையாட்டு துறை சங்கங்கள் ஏதேட்சையான அடிப்படையில் இயங்குவதற்கு இந்த புதிய சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது இந்த விளையாட்டு சங்கங்கள் அல்லது ஒன்றியங்களில் முக்கிய பதவி நிலைகளில் வகிப்போருக்கு சில அடிப்படை தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணிக்கு புதிய தலைமை

இந்திய அணிக்கு புதிய தலைமை

அதிகபட்ச கால வரையறை

சில பதவிகளை வகிக்கக்கூடிய அதிகபட்ச கால வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் போன்ற பதவிகளின் பதவிக் காலம் 8 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிறைவேற்று குழு உறுப்பினர்களாக 12 ஆண்டுகள் வரையில் பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் விளையாட்டுத்துறை சட்டங்களில் புதிய மாற்றம் | New Regulations Of Sports Sri Lanka

இவ்வாறு பல்வேறு விடயங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களை பதிவு செய்வதற்காக 50000 ரூபாவிலிருந்து 30000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 3 மாவட்டங்களில் இயங்க வேண்டும் எனவும் ஏழு மாவட்டங்களிலேனும் பணிகளை விஸ்தரிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார பதவிகளை வகிப்பவர்கள் சில தொழிற்சார் தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாளர் போன்ற பதவிகளுக்கு பட்டய கணக்காளர் அல்லது முகாமைத்துவம் அல்லது வணிக கற்கை சார் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு வீரர்களின் உறவினர்கள் இந்த நிறுவனங்களில் பதவி வகிக்க முடியாது எனவும் சூதாட்ட நிறுவனங்கள் சட்டவிரோத ஆட்கடத்தில் நடவடிக்கைகள் ஆட்ட நிர்ணயம் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த நிறுவனங்களில் அங்கம் வகிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ். சிறுமி: பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை!

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ். சிறுமி: பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை!

வெளிப்படை தன்மை

அரசியல்வாதிகள் இந்த நிறுவனங்களில் அங்கம் வகிக்க முடியாது என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் முறையாக நடத்தி வெளிப்படை தன்மையுடன் பதவி வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் விளையாட்டுத்துறை சட்டங்களில் புதிய மாற்றம் | New Regulations Of Sports Sri Lanka

அது தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு சங்கங்களின் ஊடாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்கள், உடத்தகுதி மருத்துவ தகுதி தேர்வு போன்ற விளையாட்டு துறை அமைச்சரது அனுமதிக்கு உட்பட்ட வகையிலேயே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் இயங்கி பல்வேறு பிரதான விளையாட்டுத்துறைசார் சங்கங்களில் பாரியளவு ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது ஒரே தரப்பினர் தொடர்ந்து நிர்வாகம் செய்து வந்ததாகவும், பாரிய பண மோசடிகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. சில விளையாட்டு சங்கங்களுக்கு சர்வதேச அளவில் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பல முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த புதிய விளையாட்டுச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையிலான விசேட வர்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ். சிறுமி: பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை!

உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் யாழ். சிறுமி: பெற்றோர் முன்வைத்துள்ள கோரிக்கை!

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US