ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தையை அணுகுவதில் இலங்கைக்கு உள்ள சிக்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகளால் 2027ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒன்றிய நாடுகளுக்கான சந்தையை அணுகுவதில் இலங்கை புதிய சவால்களை எதிர்கொள்ளும் என்று ஜேர்மன் நாட்டின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி மற்றும் GSP+ விதித்த புதிய வரிகள் காரணமாக இலங்கை அதன் ஏற்றுமதி சந்தையில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் இதுவும் வருகிறது.
ஜேர்மன் பெர்லினில் உள்ள இலங்கை பங்குதாரர்கள் குழுவினர் மத்தியில் உரையாற்றிய மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிபுணர் மார்கஸ் லோனிங் தெரிவித்ததாவது,
புதிய விதிமுறைகள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் மரம், கொக்கோ, கோப்பி, பாம் எண்ணெய், தோல் மற்றும் மாட்டிறைச்சி, சோயா மற்றும் இறப்பர் போன்ற துறைகள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான விதிமுறைகள் இலங்கைக்கு பொருந்தாது, ஆனால் குறைந்தபட்சம் சில துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, அந்த சூழலை கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம் என்று மார்கஸ் லோனிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு பொருந்தும் விதிமுறைகள், காடழிப்பு எதிர்ப்பு ஒழுங்குமுறைப்படி, காடழிப்பை ஏற்படுத்தக் கூடிய ஏற்றுமதி பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய சந்தை ஏற்றுகொள்ளாது.
ஆதலால் காடழிப்பை ஏற்படுத்தாத பொருட்களாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் எந்த வகையிலும் மேலும் காடழிப்பை ஊக்குவிக்க விரும்பவில்லை. மரங்கள் அழிக்கப்பட்ட அந்த நிலத்தில் வளர்க்கப்படும் பொருட்களை வாங்குவதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்.
தெளிவான ஆதாரங்கள்
அதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடைமுறைக்கு எடுத்துள்ளது.அதனால் குறித்த பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பார்க்கிறார்கள். அந்த விதிமுறைகளை மீறினால், அந்த பொருட்கள் ஐரோப்பிய சந்தைக்கு வர தடைவிதிக்கப்படுகிறது.
பலவந்தமாக மேற்கொள்ளப்படும் உழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஒழுங்குபடுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பலவந்தமாக மேற்கொள்ளப்படும் உழைப்பு குறித்த ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விநியோகச் சங்கிலிகளை ஆராய்ந்து பார்பார்கள்.
சந்தேகம் ஏற்பட்டால் தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவந்தமாக மேற்கொள்ளப்படும் உழைப்பில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மார்கஸ் லோனிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



