புடின் - ட்ரம்ப் புதிய ஒப்பந்தம்..! அமெரிக்காவுக்குப் புறப்பட்ட ரஷ்ய டீசல் கப்பல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 40,000 மெட்ரிக் தொன் ரஷ்ய டீசலை ஏற்றிய “அஜியோய் ஃபனென்டெஸ் (Agioi Fanendes)” என்ற மோல்டா கொடியுடைய கப்பல் நியூயோர்க் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் டீசல் விலையைக் குறைக்கும் நோக்கில் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அமெரிக்காவை சென்றடையும் எரிபொருள் கப்பல்
இதற்காக ரஷ்யா மீதான சில கட்டுப்பாடுகளையும் அவர் தளர்த்தியுள்ளார். ரஷ்யா தனது சுயக்கட்டுப்பாட்டுத் தடையை நீக்கி, முதற்கட்டமாக 300,000 மெட்ரிக் தொன் டீசலையும், நவம்பரில் 500,000 தொன்னையும், அதன்பின் 1 மில்லியன் தொன்னையும் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் பிரைமோர்ஸ்க்(Primorsk) துறைமுகத்தில் இருந்து நேற்று(22) புறப்பட்ட இந்த முதற்கட்டக் கப்பல், நவம்பர் 7 ஆம் திகதி அமெரிக்காவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.