இலங்கையில் புதிய நடைமுறை! இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என பெண்களுக்கு அறிவிப்பு
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் 'மித்துறு பியஸ' ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலவச சேவை வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.
சில நிலையங்களில் வார இறுதி நாட்களில் சேவை வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள 80 வைத்தியசாலைகளில் மித்துறு பியஸ மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேவையினை ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகவும் பெண்கள் குறித்த சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 070-261-11-11 என்பதாகும். 24 மணிநேரமும் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
