கொழும்பில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஹங்வெல்ல முதல் மோதரை வரை களனி கங்கையின் இருபுறமும் 3 மீற்றர் உயரமுள்ள அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார்.
வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான உரிய திட்டங்களை வகுக்கும் நோக்கில், பிரதமரின் தலைமையில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு
இந்த அணைக்கட்டுத் திட்டத்திற்கு மேலதிகமாக, வெள்ள நீரைக் சேமிப்பதற்காக மூன்று பெரிய நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளத்தினால் கடுவெல தொகுதியில் ஏற்பட்ட சேதங்களுக்காக 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும் நான்காம் கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது பாதிக்கப்பட்ட 700 பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.