இலங்கைத் தேயிலையில் இருந்து உருவாக்கப்படவுள்ள புதிய உற்பத்தி
சர்வதேச புகழ்பெற்ற இலங்கைத் தேயிலையில் இருந்து மதுபானம் தயாரிக்கும் புதிய முயற்சியொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Ceylon Tea Liquor எனும் பெயருடன் குறித்த மதுபானத் தயாரிப்புகள் வெகுவிரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
தேயிலையின் நறுமணம் மற்றும் சுவை
களுத்துறையில் உள்ள தனியார் தொழிற்சாலையொன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அதன் பிரகாரம் இலங்கைத் தேயிலையின் தரமானதும் சுத்தமானதுமான சாற்றைக் கொண்டு நான்கு வகையான மதுபான உற்பத்திகள் தயாரிக்கப்படவுள்ளது.
Ceylon Tea Whisky, Ceylon Tea Gin, Ceylon Tea Vodka, Ceylon Tea Arrack ஆகிய நான்கு வகை மதுபான உற்பத்திகளே இலங்கைத் தேயிலையின் சாற்றில் இருந்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படவுள்ளது.
இவற்றில் தேயிலையின் நறுமணம் மற்றும் சுவை என்பன உள்ளடங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




