இலங்கை பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் அடுத்த மாதம் பேருந்து கட்டணத்திற்கான இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் அதிவேக நெடுஞ்சாலைகளில் இதற்கான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
பேருந்து தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு இணங்க இந்த அட்டைகளை அறிமுகப்படுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைய முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என ஷஷி வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கோவிட் காலப்பகுதியில் பேருந்து பயணங்கள் நீண்ட நாட்களுக்கு திறுத்தப்பட்டமையினால் அதில் பணியாற்றிய நடத்துனர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த அட்டையை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இந்த அட்டை காரணமாக நடத்துனவர்களின் தொழில்களுக்கு ஆபத்து ஏற்படாதென இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக அதனை அரச வங்கி உட்பட நிறுவனங்கள் பல இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.