ஈரானின் அரசியல் களத்தில் மாற்றம்: புதிய ஜனாதிபதி நியமனம்
ஈரானின் (Iran) புதிய ஜனாதிபதியாக மசூத் பேஸஷ்கியான் (Masoud Pezeshkian) நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார்.
இதற்கமைய அவர், ஈரான் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவின் போது, உலகத்துடனான உறவுகளை மேம்படுத்துவதாகவும், உள்நாட்டில் சமூக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்குவதாகவும் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஈரான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi), உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
50 வீத வாக்குகள்
இந்நிலையில், கடந்த ஜூலை 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அடிப்படைவாதத் தலைவரான சயீத் ஜலிலியை 3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் பேஸஷ்கியான் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஈரானில் முதல் கட்ட வாக்குப்பதிவு மே 28ஆம் திகதியன்று நடைபெற்ற போது எந்த வேட்பாளரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை. இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவசியமான ஒன்றகும்.
இருப்பினும், 42.5 வீதமான வாக்குகளைப் பெற்று பேஸஷ்கியான் முதலிடத்தையும், 38.8 வீதமான வாக்குகளைப் பெற்று ஜலிலி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
பெரும்பான்மை
மேலும், ஈரானின் அரசியலமைப்பிற்கமைய, முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறவில்லை என்றால், அடுத்த சுற்று வாக்குப்பதிவு முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையே நடைபெறும்.
இதில், பெரும்பான்மை பெறும் வேட்பாளர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார்.
இதன்படி, ஈரானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பேஸஷ்கியான், முகமது கடாமி ஈரான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சுகாதார அமைச்சராக சேவையாற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
